எதிர்கட்சித் தலைவருக்கு ஆசனத்தை வழங்க வைத்தியர் அர்ச்சுனா மறுப்பு

எதிர்கட்சித் தலைவருக்கு ஆசனத்தை வழங்க வைத்தியர் அர்ச்சுனா மறுப்பு

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (21.11) ஆரம்பமான நிலையில்
முதல்நாள் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்த பாதுகாவலர்கள் வேறு ஆசனத்தில் அமரச் சொன்னதைத் தொடர்ந்து, அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

அவர் பாதுகாவலர்களிடம் தெரிவித்திருப்பதாவது,

“இங்கு வேறு ஆசனத்தில் அமர வேண்டுமென எங்காவது எழுதி உள்ளதா, நிறைய ஆசனங்கள் உள்ளன. எதிர்க்கட்சித் தலைவரை அங்கே அமரச் சொல்லுங்கள். நான் இங்குதான் இருப்பேன்” என்றார்.

இவரது இந்த செயற்பாடானது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version