பிள்ளையான் மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

பிள்ளையான் மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரண்டாவது நாளாகவும் இன்றைய தினமும் (22.11) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்
முன்னிலையாகியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளி தொகுப்பு ஒன்றில் சிவனேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள்
செயலாளரான அசாத் மௌலானா என்பவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

அதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கும், ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல் தாரிகளுக்கும்
தொடர்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் அவர் வெளிப்படுத்திய இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை
சந்திரகாந்தன் இரண்டாவது நாளாகவும் இன்று (22.11) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னிலையாகியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version