கொழும்பு – கொலன்னாவ லக்ஸந்த தொடர்மாடி குடியிருப்பில் நேற்றிரவு (21.11) ஏற்பட்ட தீ விபத்தில் குடியிருப்புக்கு
மின்சாரம் வழங்கும் பிரதான மின்சார அமைப்பு முற்றாக எரிந்துள்ளது.
தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்ததில் சிறுவர்கள் உட்பட அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று (22.11) காலை வரை நீர் மற்றும் மின்சார விநியோகத்தை அதிகாரிகள் சீர் செய்யாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து
தொடர்மாடி குடியிருப்பின் குடியிருப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.