அவுஸ்திரேலியா இந்தியா டெஸ்ட்- ஒரே நாளில் 17 விக்கெட்கள்

அவுஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளடங்கிய டெஸ்ட தொடரின் முதற் போட்டி இன்று பெர்த்தில் ஆரம்பித்தது. இந்தப் போட்டியின் முதல் நாளில் 17 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்தப் போட்டி இரண்டு மூன்று நாட்களிலேயே முடிந்து விடுமோ என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

முதல் இன்னிங்சில் இந்தியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 150 ஓட்டங்களைப் பெற அவுஸ்திரேலியா அணி ஆக்ரோஷம் காட்டுகிறது என எதிர்பார்க்க அவுஸ்திரேலியா அணி 67 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்ளை இழந்துள்ளது. தனது முதற் போட்டியில் களமிறங்கிய நிதிஸ்குமார் ரெட்டி 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ரிஷாப் பான்ட் 37 ஓட்டங்கள். லோகேஷ் ராகுல் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார். அவர் 26 ஓட்டங்கள். அவுஸ்திரேலயா அணியின் பந்துவீச்சில் ஜோஷ் ஹெசல்வூட் 4 விக்கெட்களையும், மிற்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ், மிச்செல் மார்ஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

ரோஹித் ஷர்மா விளையாடாத நிலையில் ஜஸ்பிரிட் பும்ரா இந்தியா அணிக்கு தலைமை தாங்குகிறார். பந்து வீச்சில் அவர் 4 விக்கெட்களை கைப்பற்றினார். அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்டத்தில் அலெக்ஸ் கேரி ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களையும், ட்ரவிஸ் ஹெட் 11 ஓட்டங்களையும் பெற்றனர். மொஹமட் சிராஜ் 2 விக்கெட்களையும், ஹர்ஷித் ரானா 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.

Social Share

Leave a Reply