2023 ஆம் ஆண்டு இந்தியாவுடன் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் முன்னாள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு ரணில் விக்ரமசிங்க விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க,
“நானும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கையெழுத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் பகுதிகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.
அநுரகுமார திசாநாயக்க இந்த தொலைநோக்கு ஆவணத்தை நாம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திவுள்ளார். இந்நிலையில் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.