தலவாக்கலை – லிந்துலை உள்ளூராட்சி 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை – லிந்துலை நகர சபையில் இன்றைய தினம் (07/12) எதிர்வரும் வருடத்திற்கான வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதற்கு ஆதரவாக 4 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் மாநகராட்சி சபையின் வரவு – செலவு திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
