டிஜிட்டல் மயமாகும் போக்குவரத்து சேவை

எதிர்வரும் ஆண்டளவில் பயணிகளுக்கு திறமையான மற்றும் வசதியான பொது போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு போக்குவரத்து சேவைகளை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டங்கள் தொடர்பில் இன்று (07/12) அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஆரம்ப கட்டமாக அமைச்சின் ‘சஹசர’ திட்டத்தின் ஊடாக டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார் .

அத்துடன் 2,000 தனியார் பேருந்துகளுக்கு GPS தொழில்நுட்பம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அதே நேரத்தில் திட்டத்திற்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும் அவர் கூறினார்.

மேலும் ​​டிஜிட்டல் மயமாக்கலின் கீழ் பொதுமக்கள் மேலதிக வசதிகளை பெறுவதற்கு இணங்க கைப்பேசி செயலி ஒன்றும் எந்தவித கட்டணமுமின்றி இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

டிஜிட்டல் மயமாகும் போக்குவரத்து சேவை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version