பாகிஸ்தான் ஆளும் கட்சியினரின் விசேட சந்திப்பு

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்கள் இணைந்து பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

பாகிஸ்தானின் ஆளும் கட்சியான தெஹ்ரிக் ஈ இன்சாஃபின் சிரேஷ்ட உப தலைவர் அர்சாட் டாட் தலைமையிலான தூதுக்குழுவே இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளது.

பிரியந்த குமாரவின் கொலைச் சம்பவமானது வருந்தத்தக்கது என்றும் இதனால் பாகிஸ்தானியர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளதுடன் இதற்காக வெட்கமடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக பிரதமரின் தலைமையில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் ஆளும் கட்சியினரின் விசேட சந்திப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version