5088 ஹெக்டேயர் பயிர் செய்கை முற்றாக அழிவு

5088 ஹெக்டேயர் பயிர் செய்கை முற்றாக அழிவு

பலத்த மழை வீழ்ச்சி காரணமாக மன்னார் மாவட்டத்தில், 5088 ஹெக்டேயர் பயிர் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (26.11) செவ்வாய்க்கிழமை, மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்
இதனைத் தெரிவித்துள்ளார்,

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்’

“மன்னார் மாவட்டத்தில் நான்கு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை வீழ்ச்சி வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக மேலும் வலுவடைந்துள்ளது.

தற்போதைய நிலமையின்படி 13860 குடும்பங்களைச் சேர்ந்த 48195 பேர் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போதுள்ள காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகிக் கொண்டிருக்கின்றது.

இதுவரை பயிர் செய்கை பண்ணப்பட்ட 9709 ஹெக்டேயர் நிலத்திலே 5088 ஹெக்டேயர் பயிர் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் முக்கியமாகக் காணப்படும் கட்டுக்கரை குளத்தின் நீர் மட்டமும் நிரம்பும் நிலைக்கு வந்துள்ளது. தற்பொழுது 11 அடியாக
உயர்ந்துள்ளது.

இதனால் மன்னாரில் வெள்ள நிலமை மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகிவிடும். இதன் பாதிப்பை தடுக்கும் முகமாக, இந்த வெள்ளத்தை கடலுக்குள் வெளியேற்றும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.

ரோகினி் நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version