நவம்பர் 27 ஆம் திகதி தமிழ் மக்கள், தமது உறவுகளின் இழப்பிற்காக நினைவுகூர்வது வழமை. ஈழப்போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்காக இந்த மாவீரர் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையின் பல பகுதிகளிலும் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இலங்கையில் மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியில் இலங்கை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற்றது.
இங்கிலாந்திலும் மாவீரர் தின நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 27 ஆம் திகதி இங்கிலாந்தின், எக்ஸெல் பகுதியில் அமைக்கப்பட்ட விசேட மாவீரர் துயிலும் இல்லத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இங்கிலாந்தில் வாழும் பல தமிழ் மக்கள் உயிரிழந்த தமது உறவுகளுக்கும், உயிரிழந்த போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தியதாக எமது விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்ட அதேவேளை, தமது உறவினர்களை நினைவு கூர்ந்து உருவப்படங்களுக்கு முன்னதாக ஈகைச்சுடர் ஏற்றி தமது அஞ்சலிகளை தெரிவித்தனர். மாவீரர்களது புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. உறவினர்களை இழந்தவர்கள் மட்டுமன்றி உணர்வு பூர்வமாக தமிழ் மக்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

