18 இந்திய மீனவர்கள் கைது

18 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக ,இலங்கை
கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது மீன்பிடி படகொன்றும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் சட்ட நடவடிக்கைக்காக இலங்கை
கடலோர காவற்படை வடக்கு பிராந்திய பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 515 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 66 இந்திய மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version