பாக்கிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான பொறியியலாளர் பிரியந்த குமாராவுக்கு பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது அஞ்சலிகளை இன்று செலுத்தியுள்ளார்.
பாக்கிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் மலர் வளையம் வைத்து தனது அஞ்சலியினை இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பிரியந்த குமாராவின் கொலை நடைபெற்றது முதல் பாக்கிஸ்தான் பிரதமர் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுதலுக்கு உரியவையாக காணப்பட்டு வருகின்றன.
அரசியலுக்காக இந்த விடயங்கள் செய்யபப்டுகின்றனவோ என்ற சந்தேகம் எழுந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் போது அவரது வேலைத்திட்டங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. இதேபோல இந்த கொலை குற்றத்துக்குரிய சரியான தீர்வினை பெற்றுக்கொடுப்பாராக இருந்தால் கிரிக்கெட்டினால் அவர் உலகளவில் பலரது மனங்களில் இடம்பிடித்தனையும் விட மிக அதிகமாக இடம் பிடிப்பார்.
இவ்வாறான நிலையில் பாக்கிஸ்தான் பிரதமர் இலங்கை வரலாம் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியுமாக இருந்தால் நாளைய தினம் நடைபெறவுள்ள பிரியந்த குமாராவின் இறுதி கிரியைகளில் அவர் பங்கேற்க வரலாம், இல்லாவிட்டால் பிறிதொரு தினத்தில் இலங்கை வருகை தந்து பிரியந்த குமாராவின் குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.