வவுனியா நகரம், வவுனியா நகரம் வடக்கு, இறம்பைக்குளம், வைரவர்புளியங்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் 09 ஆம் திகதி வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. முதலாவது இரண்டாவது ஊசிகளை பெறவுள்ளவர்கள் தங்களுக்கான கிராமசேவையாளரிடம் விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து, வரிசை இலக்கத்தையும்(டோக்கன்) பெற்று காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிக்குள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமென வவுனியா மாவட்ட தொற்றுயியலாளர் வைத்திய கலாநிதி செ.லவன் வி தமிழுக்கு தெரிவித்துள்ளார்.
அரச திணைக்களங்களை சேர்ந்தவர்கள் 10 ஆம் திகதி முதல் வுனியா காமினி மகா வித்தியாலயத்தில் தடுபூசிகளை பெற்றுக்கொள்ள முடியும். வவுனியா பிராந்திய சுகாதர திணைக்களத்தின் தொற்றுயில் பிரிவில் விண்ணப்பபடிவங்களை பெற்று கிராமசேவையாளரிடம் பூர்த்தி செய்து தங்களுக்கான தடுப்பூசிகளை வுனியா காமினி மகா வித்தியாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம். பிறமாவட்டங்களை சேர்ந்தவர்கள் திணைக்கள தலைவரின் கையொப்பத்தோடு ஊசிகளை பெற்றுகொள்ள முடியும்.
நீண்ட நாள் நோயுடையவர்களும், தொற்றா நோயுடையவர்களும் அவர்களுக்கான விசேட வைத்திய நிபுணரின் ஆலோசனையோடு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியும். அவர்களுக்கான விண்ணப்ப படிவங்களை வைத்தியசாலையிலேயே பெற்று பூர்த்தி செய்து ஊசிகளை போட்டுக்கொள்ள முடியும்.
அறிவிக்கப்பட்ட மற்றைய இடங்களுக்கான ஊசிபோடும் பணிகள் வழமை போன்று நடைபெறும்.
எமது வி தமிழ் இணையத்தின் ஊடாகவும் தடுப்பூசிகள் வழங்குதல் தொடர்பில் எமக்கு கிடைக்கும் விபரங்களை உடனுக்குடன் முழுமையாக தொடர்ச்சியாக வழங்கவுள்ளோம்.