அரசாங்கம் நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விலையின் கீழ் அரிசியை விற்பனை செய்ய முடியாது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வர்த்தக,வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிபதி
அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது அரிசிக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலையை அரசாங்கம் நிர்ணயித்தது.
இதன்படி, சந்தையில் நாடு, சம்பா மற்றும் சிவப்பு அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்,
கீரி சம்பாவின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
சந்தையில் இன்னும் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், புதிய அதிகபட்ச சில்லறை விலையில்
அரிசியை விற்பனை செய்ய முடியாது எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தங்களது மாதாந்த நுகர்வு பொருட்களுக்கான செலவில் அதிகளவாகப் பங்கினை
அரிசிக்காகச் செலவிட வேண்டியுள்ளதாகவும் நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.