ஜப்பான் 300 மில்லியன் ரூபா நிதியுதவி

ஜப்பான் 300 மில்லியன் ரூபா நிதியுதவி

அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது.

இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA)
ஆகியவற்றின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அவசரகால பொருட்கள் நேற்றிரவு (12.08)

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த விசேட சரக்கு விமானம் மூலம் விநியோகிக்கப்பட்டன.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Isomata Akio வினால் விநியோகிப்பதற்காக உள்ளுர் அதிகாரிகளிடம் இந்த பொருட்கள் கையளிக்கப்பட்டன.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருட்களை தொடர்புடைய
மாவட்ட செயலாளர்களிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version