வயோதிபப் பெண் படுகொலை சம்பவம் – ஏழு பேர் கைது

வயோதிபப் பெண் படுகொலை சம்பவம் - ஏழு பேர் கைது

அநுராதபுரம்- பதவியா பகுதியில் கடந்த வாரம் வயோதிபப் பெண்ணொருவர்
படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு பலவெவ பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவர் வீட்டிலிருந்த போது
மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த அடையாளந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய கொலை சம்பவத்துடன் தொடர்புடைய
சந்தேக நபர்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது.

புல்மோடை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பதவியா பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது எஹெதுகஸ்வெவ, கிரிப்பன்வெவ மற்றும் பதவியா பிரதேசங்களில் இருந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து T-56 துப்பாக்கி 01 மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட
பல பொருட்களையும் பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது கொலை சம்பவத்துடன்
தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version