வலுசக்திக் கட்டமைப்பைப் பலப்படுத்தல் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை ஒருங்கிணைக்கின்ற கருத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியால் நிதி வழங்கப்படும் மின்சக்திக் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கான கருத்திட்டத்தின் கீழ் விநியோக வலையமைப்பை பலப்படுத்தல் மற்றும் நவீனமயப்படுத்துவற்காக அடையாளங் காணப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடுவதற்காக 2024.09.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, திறைசேரி பிணையின் அடிப்படையில் வேறு வேறான 02 கடன் ஒப்பந்தங்களின் கீழ் மின்சார சபை மற்றும் வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார் (தனியார்) கம்பனிக்கு முறையாக 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுமாக 200 மில்லியன் கடன் தொகையை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.
குறித்த கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதற்கான பிணை ஒப்பந்தத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கையொப்பமிடுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.