வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நீதிகோரிப் போராட்டம்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நீதிகோரிப் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒண்றினைந்து, இன்று காலை 9.30 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பாகப்
போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கையில், காணாமல் போனோரது புகைப்படங்கள்,பதாதைகள், மற்றும் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு, “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்” “ தமிழர் பகுதியில் விகாரைகள் எதற்கு, தழிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்” வெள்ளை வானில் கடத்தப்பட்ட பிள்ளைகள் எங்கே”” இராணுவத்திடம் சரணடைந்த பிள்ளைகள் எங்கே” என கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் போராட்டத்தில் கலந்து கொண்டார்,

இதே வேளை இப்போராட்டமானது வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version