பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவிற்கு தனது இரங்கல்களை தெரிவித்திருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அவரது இரங்கல் செய்தியில், பிரியந்தவின் மாதச் சம்பளம் அவரது குடும்பத்திற்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இரங்கல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.
அத்துடன் இஸ்லாம் மதத்தின் பெயரை வைத்துக்கொண்டு வன்முறைகளில் ஈடுபடும் சகலருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், சியால்கோட்டில் உள்ள வணிகர்களினால் பிரியந்தவின் குடும்பத்திற்கு ஒரு இலட்சம் டொலர் இழப்பீடு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்றைய தினம் (08/12) பிற்பகல் இடம்பெறவுள்ள பிரியந்தவின் இறுதி சடங்கில் கலந்துகொள்வார் என ஊடகமொன்றில் செய்தி வெளியாகியிருந்த நிலையில், ஆனால் அதுதொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
