சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல பதவி விலகியுள்ளார்.
சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகுதி தொடர்பான சர்ச்சையை மேற்கோள்காட்டி பதவி விலகியுள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்ட ரன்வல, தாம் பொய்யான அறிக்கைகளை வெளியிடவில்லையென்றாலும், சில ஆவணங்கள் தம்மிடம் இல்லாத காரணத்தினால் தற்போது தனது கல்விப் பதிவுகளை நிரூபிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.