சபாநாயகரின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்

சபாநாயகரின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்

சபாநாயகர் அசோக ரன்வலவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டார்.

இதனை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி தொடர்பில் எழுந்த சர்ச்சைகளை மேற்கோள்காட்டி, அசோக ரன்வல நேற்றைய தினம் (13.12)பதவி விலகினார்.

தகுதிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தனது கல்வித்தகுதி தொடர்பாக எந்த பொய்யான தகவலையும் தெரிவிக்கவில்லை என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version