உலகளவில் வேலை நாட்கள் ஐந்தாக இருந்து வரும் சூழலில் அதற்கும் குறைவாக 4½ நாட்களை வேலை நாட்களாக அறிமுகப்படுத்தும் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது.
பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக இருந்து வருகிறது. அதன்படியே ஐக்கிய அரபு அமீரகத்திலும் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக உள்ளது. அதாவது, ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு ஊழியர்களுக்கு ஞாயிறு முதல் வியாழன் வரை வேலை நாட்களாகவும், வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை நாளாகவும் இருக்கிறது.
அங்கு பல ஆண்டுகளாக இதே நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் பல தனியார் நிறுவனங்களும், பாடசாலைகளும் இதையே பின்பற்றுகின்றன.
இந்நிலையில் தற்போது இதில் மிகப்பெரிய மாற்றத்தை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை நாட்கள் 4½ நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது, மேற்கத்திய நாடுகளை போலவே ஐக்கிய அரபு அமீரகத்திலும் இனி திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வேலை நாட்கள் ஆகும். அதிலும் வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் புனித நாளாக கருதப்படுவதால் அன்று ½ நாள் மட்டுமே வேலை நாள் ஆகும்.
