‘சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது| – லசந்த MP

பல தசாப்தங்களாக திரவ பெற்றோலிய எரிவாயு (LPG) நிறுவனங்கள் நுகர்வோருக்கான எந்தவொரு பாதுகாப்பையும் வழங்கத் தவறியுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று (07/12) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அதுதொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 6ஆம் திகதி வரை, உள்நாட்டு மற்றும் வணிக அளவில் எரிவாயு தொடர்பான 505 தீ மற்றும் வெடிப்பு சம்பவங்களை பதிவு செய்துள்ளோம். அந்தவகையில், இரு தனியார் எரிவாயு நிறுவனங்களும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது’ என்றும் கூறினார்.

இந்த வருடம் கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் பாரிய அளவிலான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரே நாளில் 16 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பல தசாப்தங்களாக இச்சம்பவங்களுக்கு கவனம் செலுத்தாததற்கு அரச நிறுவனங்கள் மற்றும் இரண்டு தனியார் நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

'சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது| – லசந்த MP
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version