மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள்

கொவிட் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 8,000 முறைப்பாடுகள் இன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி.புஞ்சேவா தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸ், கல்வி மற்றும் சுகாதார திணைக்களங்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

தாமதமாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version