நிசாம் காரியப்பர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

நிசாம் காரியப்பர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

நிசாம் காரியப்பர் 10 ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று (18.12) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் கையொப்பமிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் உறுப்பினராக நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற ஆணை பெற்ற பைசர் முஸ்தபா நேற்று (17.12) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குத் தெரிவான சுஜீவ சேனசிங்க, மொஹமட் ஸ்மைல் முத்து மொஹமட் மற்றும் மனோ கணேசன் ஆகியோரும் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version