இலங்கைக்கு புகலிடம் கோரி வருகைத்தந்த அகதிகள்

இலங்கைக்கு புகலிடம் கோரி வருகைத்தந்த அகதிகள்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரையொதுங்கிய, மியன்மார் அகதிகள், இலங்கைக்கு புகலிடம் கோரி வருகைத் தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படகு முல்லைத்தீவு கடற்பரப்பில் இருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் உள்ளது.

அரசியல் தஞ்சம் கோரி 50 நாட்களுக்கு முன்னர் தமது பயணத்தை ஆரம்பித்ததாகவும் இவர்கள் 03 படகுகளில்
பயணத்தை மேற்கொண்ட நிலையில் 2 படகுகள் மூழ்கியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 102 மக்களுடன் கரை ஒதுங்கிய மியன்மார் நாட்டுப்படகில் 35 சிறுவர்கள் இருந்துள்ளனர்.

குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு உணவுகள் மற்றும் உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள், அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை நேரில் சென்று முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையினர் பார்வையிட்டு நிலமைகள் தொடர்பில் அறியத்தந்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version