அரிசி இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியை எதிர்வரும் ஜனவரி மாதம்
10 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சில் நேற்றிரவு(19.12) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே
இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அரிசி இறக்குமதிக்காக வழங்கப்பட்ட அனுமதிக்காலம் இன்றுடன்(20.12) நிறைவடையவிருந்த நிலையில்
குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனியார் இறக்குமதியாளர்களால் முன்பதிவு செய்யப்பட்ட 35,600 மெட்ரிக் தொன் அரிசி நாட்டிற்கு
கிடைத்துள்ளதாக சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.