இலங்கை முன்மொழிந்துள்ள வரி திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியத்தால் மீளாய்வு செய்யப்படும் என
சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைமுறையில் உள்ள நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு
சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்படவுள்ளது.
இந்த மதிப்பீட்டின் முழு விவரங்களும் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் அறிக்கையில்
சேர்க்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் இயக்குநர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.