பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்போவதில்லை – விஜித

பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்போவதில்லை - விஜித

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது பொருளாதாரம் மற்றும் தொழிநுட்ப உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையைத்
தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு மாத்திரம் இரு நாடுகளும் இணங்கியதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20.12) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது, விசேடமாக வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

முன்னதாக கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையைப் புதுப்பித்து
அதனைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தம் தொடர்பில்
பல வருடங்களாகப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தும் முன்கொண்டு, செல்வதற்கே இலங்கை அரசாங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில் குறித்த உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டு, அதனை நடைமுறைப்படுத்துவதாக எப்போதும் கருத்து தெரிவிக்கவில்லை.

அரசியல் ரீதியான வங்குரோத்துக்குள்ளான சில தரப்பினரே, நாம் குறித்த உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டதாகப்
பொய்யான கருத்துகளைக் கூறிவருகின்றனர்.

இரு நாடுகளினதும் பொருளாதார வர்த்தக அபிவிருத்தி தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு எந்த
நேரத்திலும் தயாராகவுள்ளோம்.

அதற்கமையவே, இந்தியப் பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதியின் கூட்டறிக்கையிலும் எ
ட்கா உடன்படிக்கை தொடர்பான விடயங்களும் உள்ளடக்கப்பட்டன.

நாட்டின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலான எந்தவொரு உடன்படிக்கையிலும் இலங்கை கைச்சாத்திடாது

புதிய அரசாங்கம் அரசியலமைப்பு மாறாகச் செயற்படாது. அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனவே, அது தொடர்பில் புதிதாகப் பேசுவதற்கோ, அதனைக் கூட்டறிக்கையில் உள்ளடக்குவதற்கோ தேவையில்லை.

அடுத்த வருடத்தின் முற்பகுதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

எல்லை நிர்ணய சபையின் அறிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமையினால்
குறித்த தேர்தல் தாமதமாகி வருகிறது.

மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் முறைமை தொடர்பிலும் உறுதியற்ற நிலை காணப்படுகிறது.

எனவே, அதற்கான திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் மாகாண சபை தேர்தலையும் நடத்த முடியும்”
என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version