இயக்குனர் சங்கர் தயாள் உயிரிழப்பு

இயக்குனர் சங்கர் தயாள் உயிரிழப்பு

‘சகுனி’ படத்தின் இயக்குனர் சங்கர் தயாள், பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது திடீரென்று மாரடைப்பு
ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

2012ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாகிய சகுனி திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகியிருந்த சங்கர் தயாள் 12
வருடங்கள் கழித்து “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

செந்தில், யோகி பாபு, சரவணன், ராகுல், லிசி ஆண்டனி ஆகிய பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
மீனாட்சி அம்மன் மூவிஸ் நிறுவனம் சார்பில் அருண் குமார் சம்மந்தம் மற்றும் சங்கர் தயாள் இணைந்து
இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு சங்கர் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று (19.12) சென்னையில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இயக்குனர் சங்கர் தயாளுக்கு, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலியே இவர் உயிரிழந்துள்ளார்.

47 வயதான இயக்குனர் சங்கர் தயாள் இன் இறப்பு சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version