இலங்கை முழுவதும் அரிசி தொடர்பாக சுமார் 600 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும் விசாரணை தொடரும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
அண்மைய நாட்களில் 35,600 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
அரிசி இறக்குமதிக்காக வழங்கப்பட்ட அனுமதிக்காலமும் நேற்றுடன்(20.12) நிறைவடையவிருந்த நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.