நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்டு விசேட தேவைக்குட்பட்டவர்களான, பெண் தலைமைத்துவ குடும்பங்களானவர்களுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்தும் விசேட திட்டங்களை உருவாக்கி எதிர்வரும் ஆண்டுக்கான பாதீட்டில் உள்ளடக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த 18.12.2024 அன்று நடைபெற்ற குறைநிரப்புத்தொகை செலவீனத்தலைப்பு 102 நிகழ்ச்சித்திட்டம் 01 தொடர்பான விவாதத்திலே கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இந்த நாட்டிலே நடைபெற்ற யுத்தத்தாலே குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலே விசேட தேவைக்குட்பட்டவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பொருளாதார ரீதியில் மிகவும் நலிவடைந்தவர்களாக காணப்படுகின்றார்கள். அவர்களுக்கான விசேட திட்டங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை.
ஆகவே, அடுத்த வருடத்திற்கு தயாரிக்கின்ற பாதீட்டில் அவர்களுக்கான விசேட திட்டங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கும் என்கின்ற வேண்டுகோளைமுன்வைக்கின்றேன்” என்றார்.