அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லையென யாழ்ப்பணம் – கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடத்தொழில் அமைச்சருமான சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (26.12) நடைபெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தம்பிராசா மற்றும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தம்பிராசாவுக்கு யார் அனுமதி வழங்கியது எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை ஏன் உள்ளே விடுகின்றீர்கள், தம்பிராசாவை வெளியே அகற்றுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் கூறினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சந்திரசேகரன், இனிமேல் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version