அடக்குமுறைப் போக்குக்கு இடமளிக்க முடியாது- சஜித்

அடக்குமுறைப் போக்குக்கு இடமளிக்க முடியாது- சஜித்

நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், சிறப்புரிமைகள், நிலையியற் கட்டளைகள் என சகலதும் இன்று மீறப்பட்டு வருவதாக
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (05.02) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சிறப்புரிமை பிரச்சினையொன்றிற்காக, சபாநாயகர், சபை முதல்வர் மற்றும் ஜனாதிபதியை சந்தித்தும் தொலைபேசி வாயிலாகவும் கலந்துரையாடினோம்.

பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்காத பட்சத்திலேயே சபையில் கேள்வி எழுப்புகிறோம்

நிலையியற் கட்டளைகள், சம்பிரதாயங்கள், ஒழுங்குவிதிகள் குறித்து சபாநாயகர் பேசினாலும், இந்த சம்பிரதாய ஒழுங்குகள் பின்பற்றப்படுவதில்லை.

சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் Erskine May மற்றும் கவுலன் ஷட்லர் போன்ற விதிகள் மற்றும் மரபுகளைக் கொண்ட புத்தகங்களைப் படிக்குமாறு
பரிந்துரைக்கிறேன்.

வெளிநாட்டு தூதுவர்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற நட்புறவுச் சங்கங்களிலும் வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
இது நாடாளுமன்ற சம்பிரதாயம் அல்ல. முற்போக்காக நடந்து, நாடாளுமன்ற குழுக்களில் எதிர்க்கட்சிக்குத் தேவையான
பிரதிநிதித்துவ எண்ணிக்கையை பெற்றுத் தருமாறு கோருகிறோம்.

தற்போது கூட்டுறவு சங்கத் தேர்தல்களிலும் அடக்குமுறை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கம்புறுப்பிட்டியிலும் அடக்குமுறையே நடந்தது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கூட சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராக பேசியதால் அங்கும் அடக்குமுறை முன்னெடுக்கப்பட்டது.
இந்த அடக்குமுறைப் போக்குக்கு இடமளிக்க முடியாது” என்றார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version