புதிய இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி நியமனம்

புதிய இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி நியமனம்

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இன்று (30.12) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான நியமனக் கடிதங்கள் இன்று (30) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

இராணுவத் தளபதி ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் நாளை (31.12) தமது பதவிகளில் இருந்து ஓய்வு பெறுகின்ற நிலையில், புதிய தளபதிகள் ஜனவரி 01 ஆம் திகதி பொறுப்பேற்கவுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version