அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்கும் பொது அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவுள்ளமை தொடர்பில் தனது அதிருப்தியை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டருக்கு மரியாதை செலுத்தும் முகமாக அமெரிக்க கொடியை ஒரு மாத காலத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிட அமெரிக்க ஜனாபதி ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார்.
ஜனவரி 09 ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் கார்ட்டருக்கு அஞ்சலி செலுத்தவுளள்தாக அறிவித்துள்ளார். அதன் போது “எனது பதவியேற்பின் போது அற்புதமான அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவுள்ளது. ஜனநாயகம் உறங்கிவிட்டது” என ட்ரம்ப் சமூக வலைதளத்தின் ஊடக பதிவிட்டுள்ளார். “அவர்கள் இதனை சிறப்பானதாக நினைக்கலாம். ஆனால் அவர்கள் நாட்டை நேசிக்கவில்லை. தங்களை பற்றியே சிந்திக்கிறார்கள்” என கூறியுள்ள ட்ரம்ப், யாரும் இதனை பார்க்க விரும்ப மாட்டார்கள். எந்தவொரு அமெரிக்க பிரஜையும் மகிழிச்சியடையமாட்டார்கள்” என மேலும் கூறியுள்ளார்.