அரச கரும மொழிகள் ஆணைக்குழுவுக்கு புதிய நிர்வாகம்

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவுக்கு புதிய நிர்வாகம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர். எம். டபிள்யூ. ராஜபக்ச, பேராசிரியர் ஜோசப் யோகராஜா மற்றும் லரீனா அப்துல் ஹக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான நியமனக் கடிதங்கள் இன்று (06.01) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன.

அரச கரும மொழிகள் சம்மந்தப்பட்ட முறைப்பாடுகள் இருப்பின் எழுத்து மூலமாக தனக்கு அறியத்தருமாறும் தான் உடனடி நடவடிக்கைள் எடுப்பேன் எனவும் வி மீடியாவுக்கு பேராசிரியர் ஜோசப் யோகராஜா தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version