விளையாட்டு, இளைஞர்களின் செயற்பாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியா ஆதரவு

விளையாட்டு, இளைஞர்களின் செயற்பாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியா ஆதரவு

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஷா மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06.01) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, விளையாட்டு பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

:விளையாட்டு வளர்ச்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகவும், கிரிக்கெட் மற்றும் பிற விளையாட்டு நடவடிக்கைகளின் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் உள்ள விளையாட்டு மேம்பாட்டு திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் இந்த சந்திப்பில் தெரிவித்தார்” என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இளைஞர் விவகாரத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த நம்புவதாகவும், அதற்காக இந்திய இளைஞர் விவகாரத் திணைக்களத்திற்கு வருகை தருமாறு இந்நாட்டின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சருக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அழைப்பு விடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version