ஏழை மக்களை சுத்தம் செய்யாமல், அரசாங்கம் நாட்டை சுத்தம் செய்யவேண்டும் – நாமல்

ஏழை மக்களை சுத்தம் செய்யாமல், அரசாங்கம் நாட்டை சுத்தம் செய்யவேண்டும் - நாமல்

தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் ஊடாக அரசாங்கம் ஏழை மக்களைச் சுத்தப்படுத்துவதற்குப் பதிலாக நாட்டை சுத்தம் செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள், பலாக்காய் வெட்டுபவர்கள், பலாக்காய் உண்பவர்கள், வடை விற்பவர்கள், சந்திகளில் வியாபாரம் செய்பவர்களே க்ளீன் ஸ்ரீலங்கா மூலம் சுத்தம் செய்யப்படுவதாகவும், அதன் மூலமாக மக்களே சுத்தம் செய்யபப்டுவார்கள் எனவும், அதனை நிறுத்திவிட்டு நாட்டை சுத்தம் செய்ய அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமெனவும் நாமல் கூறியுள்ளார்.

முச்சக்கர வண்டிகள் மற்றும் பேருந்துகளில் வீதி போக்குவரத்துக்கு இடையூறில்லாமல் மாற்றங்கள் செய்ய அனுமதிக்கலாம் எனவும், அது ஒரு பாரிய வியாபாரம் எனவும், பலர் வாழ்வாதாரத்தை பெறுகின்றனர் எனவும் நாமல் கருத்து கூறியுள்ளார்.

“அரசாங்கத்தை அரசியல்வாதிகள் தாம் நினைத்து போன்று 24 மணி நேரத்தில் மாற்ற இயலாது. மக்கள் அரசாங்கத்துக்கு உரிய காலத்தை வழங்கியுள்ளார்கள். அதனடிப்படையில் அரசாங்கம் செயற்படவேண்டும். அதனை செயற்படுத்தும் உரிமை எனக்கும் உண்டு” எனவும் மேலும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாமலின் வாகனத்தில் உள்ள மாலை தொடர்பில் ஊடகவியலார் ஒருவர் கேள்வியெழுப்பினார். “நான் முருகனை வணங்குகிறேன். நம்புகிறேன். எனது வாகனமும் நன்றாக தெரிகிறது. எனக்கும் நன்றாக வீதி தெரிகிறது” என பதிலளித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version