வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் தரம் 11இற்கான தவணைப் பரீட்சை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிந்த சம்பவத்தையடுத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
தவணைப் பரீட்சை தொடர்பான சிங்கள இலக்கிய வினாத்தாள் சமூக ஊடகங்கள் ஊடாக வெளியாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.