![தமிழக மீனவர்கள் 10 பேர் கைது](https://vmedianews.com/wp-content/uploads/2024/08/blue-ocean-jaffna-project.jpg)
நெடுந்தீவு அருகே சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதன்போது படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.