கடந்த 15 மாதங்களாக காஸாவில் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புகள் போர் நிறுத்தத்தில் ஈடுபட சம்மதம் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டேர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை இஸ்ரேல் பயணக்கைதிகளையும், ஹமாஸ் சிறைக்கைதிகளையும் பரிமாற்றிக்கொள்ளவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ரொய்ட்டேர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆதரவுடன், எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்களின் மத்தியஸ்தத்தில் பல மாதங்களாக நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதுள்ளதாகவும், மேலும் ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு சற்று முன்னதாக இது நடந்ததுள்ளது எனவும் ரொய்ட்டேர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் தலைமையிலான துப்பாக்கிதாரிகள் பாதுகாப்புத் தடைகளை உடைத்து இஸ்ரேலுக்குள் நுழைந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். 1,200 இராணுவம் மற்றும் பொதுமக்களைக் கொன்று 250 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மற்றும் இஸ்ரேலியர்களை பணயக்கைதிகளைக் கடத்தி சென்றனர். அதனை தொடர்ந்து இஸ்ரேலிய துருப்புக்கள் காசாவை ஆக்கிரமித்தன.
காசாவில் 46000 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை குறுகிய கடலோரப் பகுதியை இடிபாடுகளுடன் கூடிய பாழடைந்த நிலமாக மாற்றியுள்ளததாகவும், லட்சக்கணக்கான மக்கள் குளிர்காலக் குளிரை கூடாரங்களிலும் தற்காலிக தங்குமிடங்களிலும் எதிர்கொண்டு தப்பிப்பிழைத்துள்ளனர் எனவும் வெளியாகிய செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தான் 20 ஆம் திகதி பதயேற்பதற்கு முன்னர் இரு தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவேண்டுமென உறுதியாக இருப்பதாக கூறியுள்ள ரொய்ட்டேர்ஸ், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மத்திய கிழக்கு பிரதிநிதியே இரு தரப்பு ஒப்பந்தம் செய்யப்படாமல் போக காரணம் எனவும் தெரிவித்துள்ளது. “பயணக்கைதிகள் விடுவிக்கப்படாமல் போனால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்” என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த மோதல் மத்திய கிழக்கு முழுவதும் பரவியதோடு, லெபனான், ஈராக் மற்றும் யேமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலைத் தாக்கினர். இஸ்ரேல் ஹமாஸ் தலைவர் ஹெஸ்புல்லாவை கொன்றதன் பின்னரே இந்த போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுளளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.