
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையகியுள்ளார். கதிர்காமத்தில் உள்ள அரசாங்க நிலம் தொடர்பிலான விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்த நிலம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்கு மூலம் பதிவு செய்திருந்தது. குறித்த நிலத்தின் உரிமை தொடர்பில் விசாரிக்கவே கோட்டபாய ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார்.