
2021 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி மற்றும் சீனாவின் மக்கள் வங்கி ஆகியவற்றுக்கிடையில் செய்யப்பட்ட 1.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கான பண பரிமாற்ற கடனுதவி திட்டம் மேலும் 3 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
புதிய ஒப்பந்தத்தில் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, சீன மக்கள் வங்கி ஆளுநர் பன் கொங்ஷெங் ஆகியோருக்கிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்த கால நீடிப்பு ஒப்பந்தம் தற்போதைக்கு இலங்கையின் பொருளாதர நெருக்கடிக்கு ஓரளவு ஆதரவாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.