19 வயதிற்குட்பட்ட மகளிர் T20 உலகக்கிண்ணத்தின் முதல் நாள் போட்டி விபரங்கள்

அவுஸ்திரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையில் 19 வயதிற்குட்பட்ட மகளிர் T20 உலகக்கிண்ணத்தின் முதல் போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் அவுஸ்திரேலியா அணி 9 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 15.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 48 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 6.4 ஓவர்களில் 1 விக்கெட்டினை இழந்து 49 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் 19 வயதிற்குட்பட்ட மகளிர் T20 உலகக்கிண்ணத்தின் இரண்டாவது போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து அணி 3.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 28 ஓட்டைகளை பெற்றது.

நைஜீரியா மற்றும் சமோவா அணிகளுக்கிடையில் 19 வயதிற்குட்பட்ட மகளிர் T20 உலகக்கிண்ணத்தின் மூன்றாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

நேபாளம் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 19 வயதிற்குட்பட்ட மகளிர் T20 உலகக்கிண்ணத்தின் 4 ஆவது போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பாடிய நேபாளம் அணி 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 52 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 13.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 53 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகளுக்கிடையில் 19 வயதிற்குட்பட்ட மகளிர் T20 உலகக்கிண்ணத்தின்ஐந்தாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் 19 வயதிற்குட்பட்ட மகளிர் T20 உலகக்கிண்ணத்தின் 6 ஆவது போட்டியாகா நடைபெற்றது. இந்த போட்டி மழை காரணமாக 11 ஓவர்களாக குறைக்கப்பட்டு விளையாடப்பட்டது. இந்த போட்டியில் தென்னாபிரிக்கா அணி 22 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 11 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 91 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 11 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களை பெற்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version