சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கிண்ண தொடரின் இன்றைய முதற் போட்டியில் இலங்கை மகளிர் அணி மலேசியா அணியை 139 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது. இதில் டஹாமி 55 ஓட்டங்களை பெற்றுகொண்டார். சஞ்சனா காவிந்தி 30 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ஹிருனி ஹன்சிகா 28 ஓட்டங்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய மலேசியா அணி 14.1 ஓவர்களில் 23 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. பந்துவீச்சில் சமாதி பிரபாதா 3 விக்கெட்களையும், மனுநிதி நாணயக்கார, லிமன்ஷா திலகரட்ன ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.