
e கடவுச்சீட்டு மற்றும் e விசா ஊழல் தொடர்பில் தடயவியல் விசாரணை நடாத்தப்படுமென வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்த விடயத்துக்கு என்ன நடந்தது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்லி சம்பிக்க ரணவக்க கேள்வியெழுப்பியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற பொது நிதி குழு தடயவியல் விசாரணையை செய்யுமாறு கோரிய போது வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், பொது தேர்தல் காலத்தில் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். அதற்க்கு என்ன நடந்து என சம்பிக்க கேள்வியெழுப்பியுள்ளார்.
தன்னுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் MA சுமந்திரன் ஆகியோர் இந்த விடயத்துக்கு சட்ட நடவடிக்கை எடுக்காமல் விட்டிருந்தால் இந்த விடயம் முழுமையாக மூடி மறைக்கப்பட்டிருக்குமெனவும், இதனால் 3200 கோடி நஷ்டம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்குமென அவர் சுட்டிக்காட்டினார்.