முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தை நீக்க அரசாங்கத்துக்கு திராணியில்லை – கம்பன்பில

முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தை நீக்க அரசாங்கத்துக்கு திராணியில்லை - கம்பன்பில

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அரசியல் மேடையில் வாக்குறுதியளிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தை ரத்து செய்ய தற்போதைய அரசாங்கத்திற்கு எந்த திறனும் இல்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்கள் ஏமாற்றுவதற்காக பொய் சொன்னாலும், அரசியலமைப்பின் படி கடந்த காலத்தை பாதிக்கும் வகையில் அப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்ய முடியாது என தெரிவித்த கம்பன்பில எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

ஆனால், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதாக ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு தேசிய மக்கள் சக்தி கட்சி மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது எனப்தனையும் அவர் ஞாபகப்படுத்தினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version