![மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகள் குறைப்பு - உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு](https://vmedianews.com/wp-content/uploads/2024/08/blue-ocean-jaffna-project.jpg)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் அதிகாரிகளை குறைப்பதற்கான
அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை
அடுத்த மாதம் 19 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன்
ஆகிய மூவடரங்கிய நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாருனிகா ஹெட்டிகே,
இந்த வழக்கு தொடர்பாக பிரதிவாதிகளிடமிருந்து ஆலோசனை பெறுவதற்கு கால அவகாசம் தேவையென நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய தனக்கு காலவகாசம் வழங்குமாறும்
அவர் மன்றில் கோரினார்.
இதற்கமைய, பிரதிவாதிகள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய அனுமதியளித்த நீதிமன்றம்
தேவையேற்படின் மனுதாரர் தரப்பும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யலாம் என அறிவித்தது.
மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் மஹிந்த ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நீதிமன்றத்தின் முன் சாட்சியங்களை முன்வைத்து,
எந்தவொரு பாதுகாப்பு மதிப்பீடும் இல்லாமல் தனது கட்சிக்காரரின் பாதுகாப்பைக் குறைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
முறையான பாதுகாப்பு மதிப்பீட்டிற்குப் பின்னர் அவரது பாதுகாப்பைக் குறைப்பதா அல்லது
அதிகரிப்பதா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் உண்மைகளை உறுதிப்படுத்த தொடர்புடைய மனுவை அடுத்த மாதம் பரிசிலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.