![அம்பாறையில் போதைப்பொளுடன் ஒருவர் கைது](https://vmedianews.com/wp-content/uploads/2024/08/blue-ocean-jaffna-project.jpg)
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஒருவேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 60 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.